என் செல்ல மகனே - கவிதை போட்டி

 உடல் சிலிர்த்து, உயிர் பெருகி, உதிரம் சிந்த,

 உயர்வாய் உன்னை கைகளில் எந்தினேன்..

என் வலிகளை மறந்து வேறு எந்த ஒரு நொடியும் இவ்வளவு

இன்பத்தை கொடுதிருக்குமோ..என்று துளியம் ஐயமில்லை...

நானும் ஒரு தாய் என என்னை என்னும் தருணம்..

உன்னை அள்ளி எத்துணை முறை அனைத்து முத்தம் 

கொடுத்தாலும் போத வில்லை என்பதே உண்மை..

நீ வளர்த்து உன் மடி மீது என் தலை சாய்க்கும் போது,

என் அன்னையை உன்னில் உணர்கிறேன்..

என் அன்னைக்கு நான் கொடுத்த தாய்மை,

இன்று கொஞ்சமும் குறையாமல், எப்போதும்

நீ எனக்கு அள்ளி தருகின்றாய் என் அன்பு செல்லமே..

உன்னை பெறவே இந்த ஜென்மம் எடுத்தேனோ..

ஆயிரம் கண்கள் கண் வைக்க காத்திருக்கும் கைகள் நொடிக்க

 சொடக்கு போட்டு கொள்கிறேன் என் செல்ல மகனே....


Previous Post Next Post