நான் தாய் ஆகும் முன்னே எனக்கு தாய்மையை உணர்த்தியவனே
உன்னை 10 மாதம் கருவில் சுமக்கவில்லை
இனி மொத்த காலமும் என் உயிரில் சுமக்க ஆசை படுகிறேன்
நாளை எனக்கு ஒரு பிள்ளை வந்தாலும்
எனக்கு என்றும் தலைமகன் நீயடா
சிறு சிறு சினுங்களில் என்னை மயக்கியவனே
உன் தாமரை இதழ் விரித்து என்னை சித்தி
என்று அழைக்கும் தருனம் எப்போதடா
S. Shakila