💘 True Love Kavithai in English | Must-Read Romantic Poems

1. என்னை படைத்தவள் நீதான்💕

ஆராரோ ஆராரோ நான் பாடவா?
அதைக் கேட்டு அதைக் கேட்டு நீ தூங்க வா!
என்றும் நீ பாட, நீ பாட நான் தூங்குவேன்
இன்று நான் பாட, நான் பாட நீ தூங்க வா!
நித்தம் நித்தம் எனக்கு முத்தம் தந்தாய்!
இரத்தம் தந்து என்னை நித்தம் காத்தாய்!
தூக்கம் இன்றி எனை காத்து வந்தாய்!
என்மேல் தூசிப் பட்டால் நீயும் துடித்து போனாய்!
நிலாக்காட்டி சோறூட்டும் அன்னையே
நான் நிலாவாக பார்த்ததும் உன்னையே!
எந்தன் பாவை  நீ தான், எந்தன் தேவை  தான்!
அந்த இறைவன் தந்த எந்தன் இறைவி நீதான்!
இந்த உடலும் நீதான்  எந்தன் உயிரும் நீதான்!
இந்த உலகை  பார்க்க என்னை படைத்தவள் நீதான்!
எந்தன் கண்ணும் நீதான் கண்ணின் மணியும் நீதான்!
இமைபோல் என்னை என்றும் என்னை காப்பவள் நீதான்!
என்றும் நீ பாட, நீ பாட நான் தூங்குவேன்! 
இன்று நான் பாட, நான் பாட நீ தூங்க வா!
ஆராரோ ஆராரோ நான் பாடவா? 
அதைக்கேட்டு அதைக்கேட்டு நீ  தூங்கவா!
  கார்த்திக் கண்ணதாசன்

2. உன் அணைப்பில் நான் 💛

இத்தனை நாள் உன் மடியில் உறங்கினேன்
உன் கைகளை பிடித்து நடந்து வந்தேன்
உன் அணைப்பில் நான் வளர்ந்து வந்தேன்
நீ சொன்ன அறிவுரை கேட்டு நடந்து வந்தேன்
ஆனால் பள்ளி படிப்பின் போது
என்னைத் தனியே தவிக்க விட்டாய்!
இத்தனை நாள் உன் அன்பு
எப்பொதும் என்னைச் சுற்றி இருக்கும்!
இன்று உன் அன்பை ஏங்கி வாடுகிறேன்
உன்னை நினைத்து அழுகிறேன்
உன்னை பார்க்க வேண்டும் என்று ஏங்குகிறேன்
உன் சுவையான சாப்பாடை விட்டுவிட்டு 
இங்கு சுவையில்லாத உணவை உண்ணுக்கிறேன்
நீ  எப்பொழுது இந்த சிறையிலிருந்து
என்னை அழைத்து போகப்போகிறாய்.!!!
Sowmiya Perumal

💘 True Love Kavithai in English | Must-Read Romantic Poems – CompetitionArt.com

💑 Find the best true love kavithaigal in English that express deep emotions. Click now!