உலகத்தை காட்டி, உற்சாகமூட்டி, விலையில்லா அன்பை எனக்கு தந்தவள்..
கணவனை இழந்த வலிகளை காட்டாமல்
துணைஎன எனக்கு தோழியாய் வந்தவள்..
பாறைஎன மனதை பக்குவப்படுத்தி
உளிஎன இருந்து சிலை என வடிப்பவள்..
புத்தாடை, பூ,பொட்டு வைக்காத சாமி அவள்,
கண் முன்னே இயங்கும் இதயமாய் துடிப்பவள்..
தனிஒரு பெண்ணாக காத்து வளர்த்து,
துணிவோடு போராடி, தூங்காத போராளி..
ஏச்சுக்கும்,பேச்சுக்கும் ஆளான போதிலும்
மூச்சுக்குள் எனைவைத்து,வாழ்கின்ற ராசாளி..
எத்தனையோ உறவு இருந்தும் அவளுக்கு
இணை யாருமில்லை.
பத்து மாதம் சுமந்தஅந்த தாய் மிஞ்சி வேதமில்லை..
உறவாடி கதைபேச என்நாட்கள் போதவில்லை. அவளோடு என்ஆயுள் அதைத் தாண்டி தேவையில்லை..
Kallakurichi - கு.தமயந்தி