பதினேழு வயதில் பருவம் பார்த்து வந்ததுதான் உன் மீது என் காதல்...
இன்று பருவம் கடந்து போகிறது அது பாதையிலே...
என் நூற்றுகணக்கான இரவுகளும் நீளுகிறது உன் நினைவுகளிலே...
கடிகாரம் இழக்கும் நேரமாய் காலங்கள் கடக்கிறது வெறுமையாகவே...
நாட்கள் ஒவ்வொன்றும் நரகமாய் நழுவுகின்றதே...
காத்திருந்தேன் காதலுடன்...
அன்று நீ வேண்டுமென கேட்டேன் தர மறுத்தாய்...
இன்று நான் தான் வேண்டுமென!!
தடியை தாங்கி கொள்ளும் வயதிலே நீ என்னை ஏந்தி கொள்ள வந்தாய்...
நம் கரங்கள் நான்கு கோர்க்கையிலே!!
முதுமையால் கொஞ்சம் நாணத்தால் கொஞ்சும் நடுக்கங்கள் இருவருக்கும்...
நாற்பது ஆண்டுகள் கடந்து வெற்றி கொண்ட நம் காதல்...
உடலுக்குத்தான் முதிர்ச்சி என்றாலும் காதல் இளமையாகத்தான் இருக்கிறது!!
நம் இதழ்களின் புன்னைகையாய்..
அந்நாள் இளமையை கடந்து வா என என்னை காக்க விட்டு சென்றது இந்த முதுமையில் இத்தனை காதலை தரத்தானோ..!!