இறைவனைக் கூட
'இல்லை'_என்று மறுத்து விடலாம்.
என்னை எவரும்
'இல்லை'_என்று மறுக்கமுடியாது.
நான்
இயற்கையாய்த் தோன்றிய
இயற்கையாவேன்.
சூரியன்_சந்திரன்_கோள்கள்
ஆகாயம்_பூமி_அண்ட சராசரங்கள்
மலைகள்_நதிகள்_கடல்கள்
மழை_காற்று_பனி
புல்_பூண்டு_
பயிர்_பச்சை_உயிர்கள்
அனைத்துமே நான்
யாவுமாகியது நானே!
இயற்கையாகியநான்
எழுதுகிறேன் ஒரு கடிதம்.!
மனித இனமே!
உன்
அதீத உழைப்பு
அசாத்திய ஆற்றல்
அறிவியல் கண்டு பிடிப்புகள்
அத்தனையும் கண்டு
அதிசயித்துப் போகிறேன் நான்
உன் மெய் ஞானம்
என் மேனியை சிலிர்க்கச் செய்கிறது.
உன் விஞ்ஞானம்
என்னோடு
போட்டி போட்டு விளையாடுகிறது.
நான்
சாந்தமாய்..சமாதானமாய் சிரித்துக் கொண்டிருக்கும் வரை
நீ சாதித்துக் கொண்டிருக்கலாம்.
நான்,
சாந்தம் இழந்து..சமாதானம்இழந்து
சிரிப்பை மறந்து
சீற ஆரம்பித்து விட்டால்
நீ சாய்ந்து போவாய்.
நீ
ஓசோன் போர்வையை
ஓட்டையாக்கிவிட்டாய்.
விளைவு என்ன தெரியுமா?
சூரியனின்
புற ஊதாக் கதிர்களும்
மின் காந்தக் கதிர்களும்
நீ வாழும்
பூமிப் பந்தைப் பொசுக்கப் போகிறது.
வேண்டாம் மனித இனமே!
என் ஓசோனைக் காப்பாற்று.
என்னைக் காத்து
உன்னைக் காத்துக்கொள்!
******************************
Alwarkurichi - Annaadhasan S
Vote for the Contest Share your Friends and Family