உயரிய அன்பில் உருவான உணர்வு உலகில் கிடைக்கும் காதல் உறவு

உயரிய அன்பில் உருவான உணர்வு 

உலகில் கிடைக்கும் காதல் உறவு

 

ஒரு முறை வாழ்க்கையில் 

பல முறை மனதில் 

பாய்ந்து ஓடும் நதியாய் 

படர்ந்து வளர்ந்து வருமே

சில முறை சிறந்து

சினம் சிறிது மறந்து 

சிந்தனைக்குள் புகுந்து விளையாடுமே


உடனடி முடிவு உடலுக்கு கேடு 

உறுதியாக இருந்து உயரம் பறந்து

உரிய நேரத்தில் உண்மை உணர்த்தி 

உறவை வலுப்படுத்தி வளமாக்குவோம்... 
chennai - ம.சுப்பிரமணியன்

Poetry Competition

Previous Post Next Post