அழகிய பூமியிலே அதிசய அழகிருக்கு!!
அடர்ந்த காடும் அடங்காத கடலலையும்!!
அண்ணார்ந்து பார்க்கும் ஆகாய வானில் விண்மீண்களின் விளையாட்டும்!!
வெண்ணிலவின் ஒளியும் மேகத்தின் மழைத்துளியும்!!
ஆகாயவானை அலங்கரிக்கும் அற்புதம்!!
வளைந்தோடும் நதியும் வற்றாத ஊற்றும்!!
பூக்களின் நறுமணமும் பறவைகளின் பாட்டும்!!
ஆழ்கடல் நடுவில் அழகிய தீவும்!!
அமைதியாய் அமர்ந்திருக்கும் மலைகளும்!!
அருவியின் அழகும் இருளின் பயமும்!!
விடியலின் வெளிச்சமும் வெயிலின் உச்சமும்!!
தென்றல் காற்றும் அசைந்தாடும் மரங்களும்!!
அத்தனை அழகும் அதிசய வரங்கள்!!!
இறைவன் படைப்பில் பேசும் ஓவியங்கள்!!
போற்றுவோம் இயற்கையை வாழும் வரை!!
இனியொரு உலகு தேவையில்லை எமக்கு!!
வெண்ணிலவின் ஒளியில் விடியல் தேடுவோம்!!
இரவின் இருளிளும் இயற்கையை நேசிப்போம்!!
இயற்கையினை இம்சை செய்யாமல் இனியும் யோசிப்போம்!!