பிரபஞ்சத்தின் இருலகற்ற ஒளியேந்தி வந்தவளாம் பெண்! பெண்ணே!
துன்பங்களை தீரத்துடன் எதிர் கொண்ட பேதமை நீ!
அர்த்தமில்லா துன்பமுழல் எண்ணங்களை உதிர்திடுவாய்!
துயரங்களை படிகளாக்கி எதிர் சிகரம் ஏறிடுவாய்!
காத்திருந்த காலம் போதும் கை கொடுப்பார் தேடாதே!
உணர்வுகளில் வெறியேற்றி உனது வழி நீ தேடு!
அறச்சீற்றம் கொண்டு நீ சிங்கநடை போடு!
அடவி அனைய துன்பங்களை அமைதியாக சாடு!
வெற்றி என்ற வார்த்தை இன்று எட்டுகின்ற தூரத்தில்!
பற்றிக்கொண்ட கருத்துருவை பதறாமல் எட்டிப்பிடி!
உன் தகுதி, உன் திறமை உன்னைவிட யாரறிவார்!
நேரமிது நேரமிது உன் கனவை நனவாக்க!