கற்பனைகளை சிறைக்குள் அடைத்து சேதாரமின்றி அதை கடக்க முயன்ற போது அதற்கு உயிர் கொடுக்க முனைந்தவன் நீ....
எண்ணிலடங்கா ஆசைகளை மனதுக்குள் தேக்கி கொண்டு உள்ளுக்குள் பூட்டி வைத்த போது அத்தனைக்கும் சிறகுகள் முளைக்க வைத்தவன் நீ....
விம்மிகொண்டு இருந்த பல துன்பங்களுக்கு விடை சொல்ல வழியில்லாமல் திகைத்து நின்ற தருணத்தில் அதற்கு ஆறுதல் அளித்து தேற்றி அனுப்பி விடைகொடுத்தவன் நீ....
கனத்து கொண்டிருந்த கவலைகளின் கணங்களை மணித்துளிகளில்
இல்லையென்றாலும் காலப்போக்கில் களைந்து செல்ல காரணமானவன் நீ....
உறவுகள் ஆயிரம் குழுமிருந்தும் ஏன் என்று கேட்க ஆளில்லாமல் முடங்கி இருந்த வார்த்தைகளை உதிர்க்க வைத்து தேவைகளின் அவசியத்தை உணர வைத்தவன் நீ....
அன்பென்ற அகராதிக்கு அம்மா என்று எவர் பெயர் வைத்தாரோ
அறியவில்லை எனினும் கள்ளம் இல்லா அன்பை நாளும் விதைக்க வைத்தவன் நீ....
ஒரு பொழுதுகளிலாவது மகிழ்ச்சி பூக்குமா என்று காத்திருந்த
நேரத்தில் நொடிக்கொரு முறை புன்னகை பூக்க செய்தவன் நீ....
கேட்பராற்று கிடந்த உணர்வுகளை கிளறி தேவையானவற்றை
மட்டும் எடுத்து நெஞ்சை மகிழ்வித்து மடி சாய்த்தவன் நீ....
ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி தவித்த போதும்
மொத்தமாய் உள்வாங்கி விடாமல் கரைசேர காரணமாய் இருந்தவன் நீ....
முதன்முதலில் தோன்றும் அத்தனை காட்சிகளும்
நீயாய் இருக்க இவள் முடிவிலியில் நீயே இருப்பாய் என்ற
மனதிடத்தில் உரக்க சொல்கிறேன் என் முதலும் நீ முடிவும் நீயே ❤️❤️❤️❤️.....
கற்பனைகளை சிறைக்குள் அடைத்து சேதாரமின்றி அதை
கடக்க முயன்ற போது அதற்கு உயிர் கொடுக்க முனைந்தவன் நீ....
எண்ணிலடங்கா ஆசைகளை மனதுக்குள் தேக்கி கொண்டு உள்ளுக்குள்
பூட்டி வைத்த போது அத்தனைக்கும் சிறகுகள் முளைக்க வைத்தவன் நீ....
விம்மிகொண்டு இருந்த பல துன்பங்களுக்கு விடை சொல்ல
வழியில்லாமல் திகைத்து நின்ற தருணத்தில் அதற்கு
ஆறுதல் அளித்து தேற்றி அனுப்பி விடைகொடுத்தவன் நீ....
கனத்து கொண்டிருந்த கவலைகளின் கணங்களை மணித்துளிகளில்
இல்லையென்றாலும் காலப்போக்கில் களைந்து செல்ல காரணமானவன் நீ...
.
உறவுகள் ஆயிரம் குழுமிருந்தும் ஏன் என்று கேட்க ஆளில்லாமல்
முடங்கி இருந்த வார்த்தைகளை உதிர்க்க வைத்து
தேவைகளின் அவசியத்தை உணர வைத்தவன் நீ....
அன்பென்ற அகராதிக்கு அம்மா என்று எவர் பெயர் வைத்தாரோ அறியவில்லை எனினும் கள்ளம் இல்லா அன்பை நாளும் விதைக்க வைத்தவன் நீ....
ஒரு பொழுதுகளிலாவது மகிழ்ச்சி பூக்குமா என்று காத்திருந்த
நேரத்தில் நொடிக்கொரு முறை புன்னகை பூக்க செய்தவன் நீ....
கேட்பராற்று கிடந்த உணர்வுகளை கிளறி தேவையானவற்றை
மட்டும் எடுத்து நெஞ்சை மகிழ்வித்து மடி சாய்த்தவன் நீ....
ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி தவித்த போதும் மொத்தமாய்
உள்வாங்கி விடாமல் கரைசேர காரணமாய் இருந்தவன் நீ....
முதன்முதலில் தோன்றும் அத்தனை காட்சிகளும் நீயாய் இருக்க
இவள் முடிவிலியில் நீயே இருப்பாய் என்ற மனதிடத்தில்
உரக்க சொல்கிறேன் என் முதலும் நீ முடிவும் நீயே ❤️❤️❤️❤️.....