கார்மேகம் கண்கள் கொண்டு கதிரவன் உன்னைப் பார்த்திட..
கூவும் குயிலாய்!... கூத்தாடும் மயிலாய்!.. சுற்றித் திரிந்த நீ..
பெருமழையில் நனைந்த குருவி போல் குன்றியது ஏன்?
உன் முகம் வாடியதால்... அந்த பொன்வானமும் வாடியதே!
இந்த பெண் மேகம் கண்ணீர் சிந்தியதால்...
அந்த வெண்மேகமும் கண்ணீராய் மழைத்தூரல் சிந்தியதோ?..
உன் இன்முகம் காணாமல் என் முகம் உதிக்காது என்று
செங்கதிரோன் சபதம் ஏற்க... இந்த பூலோகம் இருண்டதே!
இருளில் தவிக்கும் ஜீவராசிகள் விடுதலை பெற்று வெளிச்சம் பெற...
எப்பொழுது பொன்சிரிப்பை நீ உதிர்ப்பாய்???
உன் இன்முகம்கண்டு பொன் வானம் மிளிர.. காத்திருக்கின்றோம்!...