அம்மா என்று நான் அழைக்க - கவிதை போட்டி

 அழகு தமிழ் அரிச்சுவடியிலே  அன்பான வார்த்தை இவள்.

அரவணைத்து அன்பு தந்து அத்தனைக்கும் காத்திடுவாள்.

வயிற்றினிலே வளருகையில் கற்பனைகள் செய்திடுவாள்.

பாசத்திற்க்கு இவளிடத்தில் பஞ்சம் என்றும் இல்லையே.

நேசம் செய்து காதல் செய்து கவலை என்றும் போக்கிடுவாள்.

ஊரு தூங்க உறவும் தூங்க உறக்கமின்றி விழித்திடுவாள்.

பசி போக்கி பிணி போக படைத்தவனை தொழுதிடுவாள்.

மடியிலே உறங்க வைத்து மழலை மொழி கேட்டிடுவாள்.

இத்தனைக்கும் எத்தனையோ கஷ்டங்களை கண்டவள் நீ...

அடுத்தவர் வசை பாடிடாமல் அயல் வீட்டில் கை ஏந்திடாமல் காத்தவளும் நீயே! 

அம்மா என்று நான் அழைக்க மறுகணமே படபடப்பாய் 

ஓடிவந்து பாசமலர் பொழிபவள் நீ... இயலாமை உனக்கில்லை 

இன்பதுன்பம் கணக்கில்லை நீங்காத சிந்தனையில் சிசுவாக நான் தானே...

கருமை வெண்மை பார்த்திடாது ஊன குறைகள் கண்டிடாது 

கடைசிவரை காத்திடும் மங்கை அம்மா நீ கண் இமையா நொடிப்பொழுதும் 

நீடு துயில் உறக்கத்திலும் நீ காத்த கரிசணைகள் காலத்தால் அழியாதம்மா.

பஞ்சு மெத்தை உறக்கம் தந்து உதிரத்தை உணவாக்கி கட்டாந்தரை 

ஓரமதில் நீ களைப்பாற யான் கண்டேன். மார்பிலே தொட்டில் 

கட்டி மாராப்பில் என்னை சுமந்து கானகமொல்லாம் 

விறகு வெட்டி காசுழைத்த கதைகளெல்லாம் யான் அறிவேன் அம்மா.

உன்னை பார் போற்ற சீமாட்டியாய் வாழ வெய்ப்பேன் என்றும்..

ஜவ்சன் அஹமட்
Previous Post Next Post