காலம் ஒரு கடல், அதில் காத்திருப்பது காதல் படகு
கரையை தேடும் படகு போல், என்றும் மனம்
காதல் தேடி அல்லவா அலைகிறது..நெடுநேரம்
காத்திருந்தேன் சாலையின் ஓரத்தில், என் காதல் வரும் என்று..
தொலை பேசி மணிக்காக காத்திருந்தேன் காதல்
என்னை அழைக்கும் என்று, அனுமதிக்காக காத்திருந்தேன்
என் காதல் என்னை ஏற்றுக்கொள்ளும் என்று,
எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தேன் காதல் எல்லாம்
நிறைவேற்றிவிடும் என்று, ஆறுதலுக்காக காத்திருந்தேன்
காதல் என்னை சமாதானம் செய்யும் என்று, திருமணம்
வரை காத்திருந்தேன் என் காதல் கை கூடும் என்று,
குழந்தை பெறும் வரை காத்திருந்தேன், வேறு காதல் மலரும் என்று,
நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன் மலர்ந்த
காதல் தொடரும் என்று, காதல் என்றும் காத்திருக்கவே வைக்கிறது.
என் மரணம் என்னும் கரையை கடக்கும் வரை..
Gayathri