பார்த்த நொடியில் - கவிதை போட்டி

                                                          பார்த்த நொடியில் தோன்றிவிடும்

இதயம் ஒரு நொடி நின்றுவிடும்

மூளை சுயநினைவை இழந்துவிடும்

வேண்டுதலில் அவள் குடும்பம் இணைந்துவிடும்

அதிகாலை அவளை தேடும்

தூக்கம் விடுமுறை போடும்

அவள் கண்களை பார்க்க இயலாது

அது ஏனோ காதலில் புரியாது

அவள் சிரிப்பில் உன் வலி மறப்பாயே

அவள் சோகத்தில் நீயும் மிதப்பாயே

அவள் புகைப்படம் உன்னை சிரிப்பூட்டும்

அவள் மௌனம் நெஞ்சில் வலிக்கூட்டும்

அழகுக்கு நீயே ஆத்திச்சூடி

அந்த ஒளவையாரும் அதை ஏற்குமடி

உன்னை படைத்ததற்கு விருது பெற்று 

கடவுளுக்கும் வீடு  வீதியடி 

அவள் கடக்கும் பாதை அழகாகும்

பெண்கள் உள்ளம் என்றுமே புதிராகும்

அவள் பேச்சு அழகிய கவிதை தான்

அவள் சிரிப்பினில் சிதறிய இளைஞன் நான்

அவள் பிரிவு உன்னை வாட்டிவிடும்

அவள் நினைவுகள் உன்னை  கொன்றுவிடும்.

                                                                                        
                                                                                               Deepanraj
                                                                                             Poetry Competition
Previous Post Next Post