இலையின் மேல் வெள்ளி பனித்துளி முத்துக்களாய் பிறக்கின்றாய்!
பச்சை வண்ணத்திற்கே அழகு சேர்க்க, உந்தன் அணிகலனை திருட,
படையெடுக்கின்றன வண்(டு)டினங்கள்!
மறைத்து வைக்கவே உன்னை அழைக்கிறேன். வா கதிரவா!
கருப்பு நிற உடையணிந்த திருடர்கள் என்னை சூழ்ந்து விட்டனர்,
காற்றில் அசைந்தேன், ஆடினேன் ஆனாலும் விடவில்லையே!
சேவலும் கூவும் நடுக்கத்தில், குளிர் பனியில் திருடர்களும்
சிக்கிய புல்லொன்றை மீட்க வா சூரியனே.
ந. நந்தகுமார்