அடி பேரழகியே - கவிதை போட்டி

 அடி பேரழகியே நீ சூட நான் கொய்த மலர் இதோ...

உன் புன்னகையில் அந்த ரம்மியமான இதழ்கள்

 ரசிக்க முட்கள் என் கைகளை கிழித்தால் தான் என்ன....!

பூமிக்கு என்ன அவசரம் நீ என்னை பார்க்கும் அந்த 

ஒரு நொடியில் அப்படியே சுழலாமல் நின்றால்தான் என்ன.....!

வென்னிலவும் கூட அழகு குறிப்பெடுக்க உன் அட்ரஸ் தேடி இறங்கி வந்தால் தான் என்ன...!

தென்றல் வந்து தேரில் ஏற்றி உன்னை ஊர்வலம் கூட்டி போனால் தான் என்ன.....!

Previous Post Next Post