கை கொடுத்து நாளாச்சு,
கும்பிட ஆரம்பிச்சாச்சு!
ஊர் சுற்றி நாளாச்சு,
வீடே உலகமாச்சு!
முகம் எல்லாம் மறந்தாச்சு,
முகமுடி போட்டாச்சு!
கோயில் எல்லாம் மூடியாச்சு,
மனமே கடவுளாச்சு!
மருந்தெல்லாம் பயனற்று போச்சு,
உணவே மருந்தாச்சு!
உலகமே சுருங்கிப் போச்சு,
உறவே அற்றுப்போச்சு!
இதுவும் கடந்து போகும்!
மதுமிதா.க