கவிதைக்கு பொய்யழகு என்பதை மெய்யாக்கிவிடுவாயே
உன்னழகை வர்ணிக்கும் பொழுதே
இருபத்தொன்பது நாட்களில் வாழ்க்கையின் தத்துவத்தையே
வானமென்னும் திரையில் ஓவியம் தீட்டினாயே
மழைக்கு நிலாசோறும் இறந்த மனிதர்களுக்கே
விருந்தளிக்கும் அறிவியல் சூத்திரம் சொல்வாயா? உன்னழகில் மயங்கி
நான் துயில் கொள்வதையே மறந்தேன் அழகே! பேரழகே!
ல.ஐஸ்வர்யா