மனைவியின் மீது ஏன் மனதினுள் இத்தனை குற்றச்சாட்டு?
மனைவியை வைத்து ஏன் மகத்தான பல நகைச்சுவைகள்?
பேசிப் பார்த்து சரிசெய்ய முயன்றேன்
பலவிதமாய் சிந்தித்தும் விடை புரியாமல் இருந்தேன்
வாள் எடுத்து வந்தால் வா ஒரு கை பார்ப்போம் எனலாம்
அன்பால் நிலைகுலைய செய்தால் எதை கொண்டு போரிடலாம்?
பெண்கள் எதற்கும் தீர்வை எதிர்ப்பார்ப்பதில்லை
ஆண்கள் தீர்வு இல்லா இடத்தில் எதையும் பகிர்வது இல்லை
அவன் அன்பின் வெளிப்பாடு எதையும் பகிராது இருத்தல்
காதலின் வெளிப்பாடு-அதை நல்ல நகைச்சுவையாக்கி பகிர்தல்
மணிபாலன்