ஓய்வின்றி துடிக்கும் இதயமே நீ ஓய்வின்றி துடித்தாய்...
ஓய்வெடுக்க மறுத்தாய் ஓய்வின்றி துடிக்கும் இதயமே
நீ என்னோடு வாழும் நொடிகளில் மட்டும் மீண்டும்
ஒரு முறை பிறக்கிறேன் நீ என்னை விட்டு விலகும் போது
என் உயிரை துறக்கிறேன் என்னுள் நுழைந்தாய் என் இதய துடித்தாய்...
என்னுள் துடிக்கும் இதயமே நான் உன்னோடு வாழும்
ஒவ்வொரு நொடியும் என் இதய துடிப்பை ரசிக்கிறேன்...
இன்பம் துன்பம் என்பது மனிதனுக்கு மட்டும் அல்ல
இதயத்திற்கும் உண்டு என்னோடு இருப்பதும் நீ
என்னுள் துடிப்பதும் நீ. ஓய்விதுடித்த என் இதயமே
என் வாழ்க்கையில் அனைத்தம் நீயே என் உயிர் பிரியும் வரை
என்னோடு யாரும் நிரந்தரமாக இருப்பதில்லை
இதயமே உன்னை தவிர இதயத்திற்கும் உண்டு
தொல்லைகள் நீ என் உடலில் ஓய்வின்றி துடிப்பதால்
தான் நான் மரணத்தை தாண்டி வாழ்கிறேன்...
என் இதயவாழ்வதற்காக துடிக்கவில்லை
நான் வாழ வேண்டும் என்று துடிக்கிறது...
ஓய்வின்றி துடிப்பதாய் ஒரு நாள் நீ ஓய்வெடுக்க
நான் துடிப்பேன் என் உயிர் பிரியும் வலிகளோடு...
S. Gunavathi