அன்னை மொழியே அழகு தமிழே
இன்ப கனியே இனிய தமிழே
உயிர் நாடியே உலகின் தமிழே
எழில் இசையே எளிய தமிழே
ஐய மொழியே ஐகார தமிழே
ஒளிச்சுடரே ஒத்திசைவே ஔவை
மொழியே ஔகாரமே மொழிகளுக்கெல்லாம்
தாய் மொழியாக விளங்கும் ஈடிணையில்லா
செந்தமிழே வாழிய! வாழியவே!...
ஜெ.வெற்றிவேல்