வடுகெடுத்து வரிசைபடுத்திய கூந்தலின் கீழே,
இருவிதழ் பதிப்பதற்க்கென இடைவேளி விட்ட நெற்றி,
கரிமுகிலை வலைத்து செய்யப்பட்ட புருவங்களை ஒட்டி,
செங்கயல்வழி மையத்தில் கூர்வேலென கருஒளி வீச,
கருங்குயில் இருமுறை கடித்த செங்நாவல் நாசிக் அடியில்,
கனிரசம் ஊரிய செவ்விதழ்களை சற்றே மலர்ந்து,
நூலின்றி கோர்க்கப்பட்ட முத்துக்கள் பொளிற,
என் பெயர் சொல்லி பாடும் நேரம், செவியோரம் சுகம் கூடுமே!
தென்றல் தேடி தந்த மலரை, தேனிலவும் வாங்கி சூடுமே!
இரவோடு மலராட, இமையாடு விழியாட, செவியோடு குழலாட,
கொடிபோல உனையேந்தி என் கரமும் தாலாட்டுமே!
நிலவும் என்னோடு சேர்ந்து தலையாட்டுமே!
இது நிஜமென்றால் விடியலுக்கு அனுமதியில்லை,
காண்பது கனவென்றால் நான் விழிக்கபோவதில்லை.
மு. சிவசந்துரு