இயந்திர உலகம் - கவிதை போட்டி

 எங்கேயோ பறந்த பறவை விட்டுச்சென்ற விதை ஒன்று,

மண்ணில் விழுந்து மழை ஈரம் தாங்கி,

வேர் பிடித்து வெப்பம் தாங்கி கிளைகள் விரித்து

நிழல் கொடுத்து கனிகள் முதிர்ந்து பழமாகிய பின்

ஊன் உயிர் வாழ உணவு தந்து உயிரினங்களின் உறைவிடமாகி

உபகாரம் செய்தேன் என்னை போல் எத்தனையோ பேர் இன்று,

விலாசங்களற்று வெறுமனே வீதி தோறும் வறண்டு கிடக்கிறார்கள்! 

கண்டும் காணாது போல், கடந்து செல்கிறாயே மானிடா?

இயந்திரமாய் மாறிப்போன இந்த உலகில்!

இதயம் இருந்தும் இல்லாத நிலையே மனிதனுக்கு!

Kokilavanipalanisamy
Previous Post Next Post