மௌனத்தின் ரீங்காரம் - கவிதை போட்டி

நிசப்தமான இரவு ஒன்றில் சப்தமான ஒரு மௌனம்.

நிழலின் கயிறு ஒன்றில் வண்ணம் பூசிய தொட்டில்.

விடைபெற்ற விடியலின் வரிசையில் அடைபட்டுப் போன ஆசைகள்.

புலம்பலின் கிறுக்கல்களில் அர்த்தமற்ற கனவுகள்.

துடிப்பின் துடுப்பு இழந்து தூக்கம் தொலைத்த நிலவுக்கு;

தாலாட்டும் தாய்க் குரலாய் மௌனத்தின் ரீங்காரம்.


கௌசல்யா.ர

Previous Post Next Post