விளைச்சல் நிலத்தை வீட்டு மனையாக்கி விற்று விட்டால் மானிடனின்
வயிற்றுப்பசிக்கு உணவிட தானியம் ஏது? கண் விற்று சித்திரம் வாங்கலாமோ?
கண்ணியமாய் விவசாயி வயலில் உண்மையாய் உழைத்து மண்ணுயிர் பசி நீக்கிப்
பிழைக்கச் செய்தால் தெய்வம் என அழைக்கத் தான் தோன்றுமே!
இயற்கை விவசாயம் செய்வதென சபதம் இயம்பி இரசாயன உரம் தவிர்த்து
மக்கும் கழிவுகளை மட்க வைத்து மண் புழு உரம் ஆக்கி
பஞ்சகவ்யம் அளவாய் கலந்து வஞ்சமில்லாமல் பூமித்தாய்க்கு ஈந்தால்
அவளும் தருவாள் செல்வம் கவலையின்றி நாம் வாழ குருவி மைனா பறவைகளைக் காக்க
வயலில் பூச்சிமருந்து தவிர்ப்பதை செயலில் காட்டிட பறவையினம் வாழ்த்து பாடாதோ!
கைபேசிக் கோபுரங்களுக்கும் நிரந்தர மூடுவிழா கண்டால் தரமாய் ஜகம் மாறிடுமே!
kannan