காலையில் செய்திதாளில் வாசித்த முதல் வார்த்தை பாலியல்!
மேலும் தொடர மனம் மறுத்தது ஏனோ விரல் மட்டும் - அந்த
வரியில் இருந்து விலகவில்லை கண்ணும் விரலும் ஆலோசித்து
மனதை அமைதிப்படுத்தின. உதடுகள் எழுத்துகளை முனு முணுக்க
அந்த குழந்தையின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் வயது பன்னிரண்டு என்றிருந்தது
எனது குட்டி தங்கை கண்முன் வந்து போனால்- அந்த பச்சிளம்
தன்னை மாய்த்துக் கொண்டால் ஏன் மாதவம் புரிந்திட வேண்டும்.
இப்படி மாய்த்துக்கொள்வா? மேலும் வாசிப்பை ஆரம்பித்தேன்
இதற்கெல்லாம் காரணம் கணக்கு வாத்தியாரம்
வேலி பயிரை கூடமேய்யும் ஆனால்- இங்கு விதையை விழுங்கி உள்ளது
கண்ணகி கலங்கி மட்டும் போயிருந்தால். அவளுக்கு வரலாற்றில் இடமில்லை.
கலங்கபடுத்தியவர்களை கலங்க வைத்தாள். கண் கலங்க அல்ல உடல் நடுங்க.
mohanraj