நிழலின் மடியை நாட சத்திரங்கள் எங்கும் காணோம்..
புதிய ஒளி முகத்தில் பட நூலகமும் கண்ணுக்கே காணோம்...
பாதி ஒழுகும் பேருந்து நிறுத்தம் எங்கும் சிதறி
தென்றலோடு துணைக்கு வரும் குப்பைக் கூளங்கள்...
மின்மினி நாணும் அளவு கடும் போட்டி கொடுக்கும் மஞ்சள் விளக்குகள்...
தங்கம் தென்பட்டாலும் ஆச்சரியம் இல்லை..
நீர் மாத்திரம் விழிக்கே அகப்பட விலை ஆழக் கிணறுகளில்...
இதனால் நெல் நாற்றுகளுக்கு இடையே ஊடல்
இல்லா அளவு ஆங்காங்கே ஓரிரண்டு பிள்ளைகள்...
இரு இலைகளுக்கு இடையே வைரமாய் ஜொலிக்கும்
ஒன்று உள்ளதே ஆ ஆ ஆ பொதுக் கோவில்!!!!
ச. சௌடீஸ்வரி