சோழன் கட்டிய கற்றளி நீதானடி
உனை தீண்ட துடிக்கும் சிற்றுளி நான்தானடி
அன்பை கொட்டும் அடைமழை நீதானடி
அதில் மூழ்க துடிக்கும் மழலை நான்தானடி
மறைந்து நிற்கும் ரதியும் நீதானடி
உந்தன் விதியும் காதல் பதியும் நான்தானடி
வைரம் பதித்த விண்மீன் நீதானடி
உனை எகிறி பிடிக்கும் கைகள் நான்தானடி
காத்து நிற்கும் பிருத்வி நான்தானடி
மனதை மீண்டும் திருட வரும் கோரி நீதானடி
உன் இசையில் தன்னை தொலைத்தவன் நான்தானடி
கண்களால் இசைய வைக்கும் என் கள்ளி நீதானடி
விழியை துரத்தி வந்த மூடன் நான்தானடி
மதியால் இதயத்தை வென்ற காதல் வேடன் நீதானடி
என்றும் சாயாத ஒற்றை பனைமரம் நான்தானடி
என்னை சாய்த்து விளையாடும் கோடை தென்றல் நீதானடி
பூட்டி வைத்த உன் இரகசியம் அறிவேனடி - உன்னை
மீண்டும் பார்க்கும் கணம் உந்தன் கலக்கம் களைவேனடி....
அமிழ்தன்