முதல் காதலில் - கவிதை போட்டி

 உன் பார்வை பாலைவனமாகும்

காணல் நீர்  காதலி ஆவாள்

தனியாய் பேசி தாகம் தீர்ப்பாய்

பார்வையில் பசி மரப்பாய்

தங்கை தோழன் ஆவாள்

தோழன் தொல்லை ஆவான்

கனவிலும் கண் விழிதிடுவாய்

அவளை காண வேண்டுமாய்

காற்றிலே படம் வரைவாய்

உன்னை உனக்குள் தேடுவாய் அவள்

ஊரை மட்டுமே சுற்றி வந்து உலகை

சுற்றியவனாய் பெருமிதம் அடைவாய்

கடற்கரை மணல் கவிதையாகும்

கடல் நீர் அமுதமாகும்

கல்லூரி கடவுள் ஆகும்

மணியோசை மங்கலமாகும்

ஆசிரியர் அர்ச்சகராவார்

புத்தகம் பூங்கொத்தாகும்

Previous Post Next Post