தீண்டி சென்றதன் மாயமென்னவோ கன்னம் கிள்ளி செய்தி சொல்லவோ...
தொட்டு விட நினைத்து மயங்கினேன் நீயோ? மண்ணை தூவி கலங்கச் செய்தாய்...
கிளையை கிள்ளி மலரை உதிர்த்து சாரலாய் தீண்டினாய்..
தென்றலாய் இன்பமும் புயலாக ரணமாகி நின்றாயே...
இசையாலே இணைந்து மங்கள ஒலியானாயே..
உன் வடிவம் பல கண்டு மனம் அதை ஏற்கிறது ஏக்கத்தாலே....
நீ(காற்று) யின்றி உயிருண்டோ உயிரின்றி அழகுண்டோ என் மூச்சே...
வி.குணசீலன்