கணவுகளின் இருக்கை வெகுதூரம் இருக்க
கடமைக்குள் மூழ்கியே வாழ்க்கையை கடக்கிறேன்
எண்ணங்கள் அலையாய் ஓட
இசைக்குள் சிரிப்பைத் தேடுகிறேன்
மன அழுத்தங்கள் முல்லாக கிழிக்க
காயங்கள் ஆறக் காத்திருக்கிறேன்\
இருளான உள்ளம் ஆசையில்லா நான்
தனிமையில் அழுகிறேன் விடியளின் ஒளிக்காக!
வி. ஆஸிகா