ஈன்றெடுத்த எனக்கு உயிர் கொடுத்த
இரவும் பகலும் நீ கண்விழித்து
என் பாதம் நிமிர்ந்து நிற்க
நீ மண்டியிட்டு கரம் பிடித்தாய்
ஆவணங்கள் பல நீ சகித்து
ஆனந்தத்தை மட்டும் பரிசளித்தாய்
கரங்களில் காயத்தை வாங்கிக் கொண்டு
கல்வியை மட்டும் கடன் கொடுத்தாய்
பல புத்தகங்கள் நான் படிக்க
காகிதமாய் நீ கசங்கி நின்றாய்
அனுபவத்தை அறிவுரையாக கொடுத்துவிட்டு
அவமானத்தை உன்னுள் புதைத்துக் கொண்டாய்
என் தலைக்கு கிரீடம் கொடுத்து
உன் தலையை தாழ்த்தி நின்றாய்
உன் ரத்தத்தை வியர்வையாக்கி
என் வாழ்வில் உயர்வை தந்தாய்
அனைத்தையும் அள்ளித் தந்து
அப்பா என்ற சொல்லை மட்டும் எதிர்பார்த்து நின்றாய்
சாமுவேல்