நிகர் செய்ய இயலா தன்னவன் மாய்ந்தபின்
நிழலற்ற தேகதுடன் தேய்கிறது உடல்
வெற்றிட உலகில் உறைவிடம் தேடுமனம்
அன்பிற்கினிய மனமெல்லாம்
சிறு சுடரோழியாய் மங்கிவிடும் பிற்போக்கு
சமூகத்தில் சடங்குகளுக்கு பஞ்சமில்லை
பிணி, புணர்வு, பசி,காதல் சோகம், கோபதின்
பங்கிடுகள் எச்சமிருக்கும் சிறகை விறி
வானத்தில் வட்டமிடு எண்ணங்களுக்கு
வண்ணமூட்டு சமூகத்தின் போலி பூட்டுகளை
உடைத்தெரி உனக்கான துணையோ வழியோ
நீயே அமைத்துக்கொள் மறுமணம் தீதில்லை...
VINOTHRAJ