எது காதல் - கவிதை போட்டி

எது காதல்? ஊடல் காதல்தான்,

அதன் பின்பு கூடலும் காதல்தான்,

சிறு பார்வைக்காக ஏங்குவதும் காதல்தான்,

ஓரக்கண்ணால் பார்ப்பதும் காதல்தான்,

ஏங்க வைப்பதும் காதல்தான்,

ஏக்கத்தை தீர்ப்பதும் காதல்தான்,

காக்க வைப்பதும் ‌காதல்தான்,

காத்திருப்பதும் காதல்தான்,

வானமளவு‌ ஆனந்தத்தை தருவதும் காதல்தான்,

கடலாளவு கண்ணிரை தருவதும் ‌காதல்தான்,

பிரியாமல் அருகில் ‌இருப்பதும் காதல்தான்,

பிரிந்து இருந்தாலும் நெஞ்சில் நினைவுகளுடன்- வாழ்வதும் காதல்தான்,

கனவை விட்டு கொடுப்பதும் காதல்தான்,

கனவுக்காக‌ விட்டு கொடுப்பதும் காதல்தான்,

இறுதிவரை ஓன்றாய் வாழ்வதும் காதல்தான்,

இறுதி மூச்சு வரை நினைவுகளூடன் மட்டுமே வாழ்வதும் காதல்தான்,

சிலநேரங்களில் மௌனமும் ஓரு காதல்தான்.....

உனக்காக நான் காத்திருப்பதும்.....

அஸ்வினி


Previous Post Next Post