மண் உண்டியலில் - கவிதை போட்டி

ஒரு நூறு என்பது அப்பாத்தாள் தரும் பத்து பைசாவில் தொடங்கி
 
அப்பா தரும் இருபது பைசாவை அண்ணண் அவனுடன் அழுதப்படியே

பிரித்து கொடுப்பதிலும் கடைக்கு செல்லுவதற்காக

அம்மாவிடம் சலுகையாய் கிடைக்கும்

ஐந்து பைசா ஆரஞ்சு மிட்டாய் ஆசையை துறந்ததிலும்

அடிக்கடி ஊரிலிருந்து வரும் மாமா மட்டுமே முழுதாய் தரும்

ஐம்பது பைசாவிலும் நிரம்பி வழியும் சந்தையில் வாங்கியாந்த

" மண் உண்டியலில் " பூந்தளிர் காலமதில் கண்டது

அம்மு தண்டபாணி


Previous Post Next Post