சோதனைகளை வென்ற மனிதன் - கவிதை போட்டி

ஒரு நாள் கூலாங்கல் தங்கமும் உரையாடி கொள்கிறது 

கூலாங்கல் சொல்கிறது என்னைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்கிறார்கள்  

உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் ஏன் சோதிக்கிறார்கள்? 

தங்கம் சொன்னது உன்னை சோதித்தால் நீ உடைந்து விடுவாய்  

என்னை எத்தனை முறை சோதித்தாலும் என் நிறமும் குணமும் மாறாது 

சோதிக்க சோதிக்க என் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது 

சோதனை இல்லாத மனிதன் கூலாங்கல் ஆகிறான் 

சோதனைகளை வென்ற மனிதன் தங்கத்தை போல் 

உயர்ந்து கொண்டே இருக்கிறான் ஜொலித்து கொண்டே இருக்கிறான் 


 Rajamuthu


                                                                                                                                                             

Previous Post Next Post