கல்வி - கவிதை போட்டி

கண்ணை மூடி கனிவுடன் நீ படித்தால், கனவில் எண்ணியபடியே உன் வாழ்க்கை;

கல்வியை வேதனை என்று எண்ணாமல் சாதனையாகும் போது உன் போதனை உலகை எட்டும்.

உன் இலட்சியத்தின் நுழைவு வாயில் தான் பள்ளி – மனிதா!

அறிவு எனும் பெட்டகத்தை திறக்க உதவும் ஒரே சாவி கல்வி மட்டும் தான் - கல்வியை நீ

கண் போன்று பாதுகாத்தால் மண்ணுலகில் சான்றோனாய் வாழ்ந்து பொன்போல விண்ணை தொடலாம்.

அருவாளை வைத்து வாழ்ந்து கொண்டு வந்திருந்த மனிதனை அறிவால் வாழச் செய்தது கல்வி.

வெறும் எழுத்துகளை கற்றுக் கொள்வது கல்வி ஆகாது அது நல்ல நடத்தையை உருவாக்க வேண்டும் அது கடமையை செய்யும் அறிவினை ஊட்டுவதாக அமைய வேண்டும்.

எவர் கேட்கும் திறனை வளர்த்துக் கொள்கிறாரோ அவருக்கு அனைத்தும் தெரியும். நீ கற்பவனாக இரு!

'எண்ணையும் எழுத்தையும்  கண் என்று சொன்னார் திருவள்ளுவர்' உன்னையும் எழுத்தையும் மின்னிட செய்யும் கல்வி தான் உனக்குக் கண்.

அறியாமையை அகற்றி அறிவை காட்டும் அற்புத விளக்கு - கல்வி.

என்னும் வித்து அழிக்க முடியாத சொத்து அல்ல விலை மதிக்க முடியாத முத்து.

கல்வி என்பது கண் போல அது மனிதனுக்கு இல்லை என்றால் அவனுக்கு வாழ்வு முழுவதும் இருளாக தான் இருக்கும்.

கல்வி என்பது வெறும் மூன்றெழுத்து தான் ஆனால் மனிதர்களின் தலையெழுத்தை மாற்றும் எழுத்து மந்திரம்.

நீ முதலில் கல்வி கற்க வேண்டும் என்றால் முதலில் எது கல்வி என்பதை தெரிந்து கொள்.

ஒரு புத்தகத்தில் இல்லாததை நம் வாழ்க்கை கல்வி கற்றுத் தரும் என்பதை நீ மறவாய்!

இமை மூடி நீ படித்தால் பல இன்பங்கள் காத்திருக்கும் உன் வாழ்வில்.

education poetry competition

Diyani Balthazaar - Batticaloa Sri Lanka

Vote for the Contest and Share your Friends & Family
Previous Post Next Post