கொல்லும் கொரோனா

பெட்டித்தங்கம் 

கொட்டிக்கிடந்தும் 

பயனற்று

போகுதே.. 


ஒட்டிக்கொண்ட

கொரோனாவாலே 

உயிர்கள்பலவும் 

சாகுதே. 


நெகிழியாலே 

நிலத்தைநிரப்பி 

நஞ்சை நாளும் 

விதைக்கிறோம்.. 


நெகிழிப்பையில் 

பிணங்கள் கண்டு, 

நெகிழ்ந்துநெஞ்சம் 

பதைக்கிறோம்..


மனிதனைமனிதன் 

பார்த்துஅச்சம் 

கொள்ளும்நிலைக்கு, 

ஆளானோம் .


தனிமை வாட்ட, 

வலிகள்கூட்ட,

தனித்தனி தீவு 

போலானோம்.


வெறிச்சோடிய

 வீதியெங்கும் 

அச்சம்கொண்டு,

உறைகிறது .


எரிக்க இடம் 

இல்லாமல் 

இடுகாடுஇன்று,

நிறைகிறது.


கோடி,கோடி

பணமிருந்தாலும் 

மூச்சுக்கிங்கே

 தட்டுப்பாடு.


 தேடிப்போய் 

தொற்று வாங்கி 

மரணப் பிடியில் 

உயிர் கூடு..

Kallakurichi - கு.தமயந்தி

Poetry Competition

Vote for the Contest Share your Friends and Family
Previous Post Next Post