உறக்கமில்லாமல்
உயிர் பயம்
கொள்ளாமல்
நோயோடு
போராடி
தாய்போல
காப்பவர்கள்.
மறக்கமுடியாத
மரணயுத்தத்தில்
கரம் தந்து
மக்களை
கரையிலே
சேர்ப்பவர்கள்.
வெள்ளாடை
அணிந்த
விண்மீன்
கூட்டமாய்,
பொல்லாத
நோயோடு,
போராடி
வருகிறார்.
கதிரவன்
கண்பட்ட
பனிப்பாறை
போலே,
கடிகாரமுள்ளாக
நில்லாமல்
கரைகிறார்.
வான்மழை
போல்
பொதுநலமாய்
பணிசெய்யும்
நிலை
கண்டு,
காண்போரின்
இதயமெல்லாம்
கசிந்துருகி
வாழ்த்துது,
இன்று.
கதறல்,
கண்ணீரை
சலிக்காமல்
கடந்து ,
பதறாமல்
சேவை
செய்திடும்
பூமணமே..
அரிதாரம்
பூசாதஅழகிய தேவதையாய்
தெரிகின்ற
உங்களை
வணங்குமே,
மா,நிலமே....
Kallakurichi - கு.தமயந்தி
Vote for the Contest Share your Friends and Family