கொரோனா

காடுகளை

 அழித்து 

கட்டிடமாய் 

மாற்றிடும் 

கேடுகெட்ட 

நம் செயலால் 

உயிர்க்காற்று 

குறைந்ததே..


கூடுகள் மறைய 

மரங்களை வெட்டி 

கூண்டாய் 

மாற்றிட 

பறவையினம் 

அழிந்ததே ...


கரியமில வாயு 

காற்றிலே கலக்க

 ஓசோன் 

ஓட்டையால் 

நோய்கொண்டு

 வாடுகிறோம். 


மரித்துவிட்ட 

பாரம்பரியம் 

இல்லாமல் 

இன்று 

துரத்தி வரும் 

துரித

உணவை 

நாளும் 

 நாடுகிறோம்..


இயற்கைக்கு 

மாறான 

செயல்களை 

செய்வதால் 

பொறுத்தது 

போதும் என 

பொங்கி விட்டாள்

 போலும். 


செயற்கையை 

இனியும் 

தவிர்க்காமல் 

இருந்தால் 

மூன்றாம் 

உலகப் போர் 

வைரஸால் 

மூளும்.

Kallakurichi - கு.தமயந்தி

Poetry Competition

Vote for the Contest Share your Friends and Family
Previous Post Next Post