புவியும் மகிழ்ந்ததே - என் அன்பே
புது மலராய் நீ மலர்ந்த முதல் நாளில்,
மான் விழிகள் ஒளிர்ந்ததே, செவ்விதழ்கள் சிரித்ததே,
பொற்கரங்கள் அசைந்ததே, தவமிருந்த தாய் மடியில்,
என் அன்பே தவழ்ந்தது நீதானே!
நிறமில்லா வண்ணம் அழகானதே,
வளமில்லா மனங்கள் செழிப்பானதே,
அளவில்லா ஆனந்தம் உருவானதே, புவியின் வரமே
என் அன்பே, அன்பின் மகளே உன் வரவால்!
S.Joshe Sheeba