எனக்கும் உனக்குமான தொடர்பு..? - கவிதை போட்டி

 வியர்வைக்கும் குளிர்க் காற்றுக்குமான இன்பத் தொலைவு..!

மின் விசிறி வந்தவுடன் ஒதுங்கியே சில காலம் மின் குளிர்விப்பானால் மூடியே பல காலம்..!

எத்துணை வந்தாலும்..? உன்னை மறந்திட முடியாதே வெளிச்சத்தைக் கக்குவாய் மின்னலாய் கண் சிமிட்டுவாயே..!
தாயின் உணவூட்டலில் வீட்டிற்குள்ளே நிலா உன்னாலே..!

தந்தையின் பேய்க்கதையில் காற்றில் அடித்தபடி பயமுறுத்துவாய் தன்னாலே..!
வேகமாய் கதவு அடித்திடும்போது கூடவே நடுங்கி சகோதரவம் உணர்த்துவாய்.!
எதிர்வீட்டுப் பின்னலை காதல் மின்ன தென்றலாய்க் காட்டிடுவாய்..!

சந்தனக் காற்றாயினும் நெகிழிப் புகையானாலும் உன்னைத் தாண்டியே எம்மைச் சேரும்..!

காற்றை உமிழ்ப்பான் ஆயிரம் வந்தாலும்..? உறவுகளுக்குள் ஒன்றாய் என்றென்றும் என் வீட்டு சன்னல்..!!

எனக்கும் உனக்குமான தொடர்பு

                                                                                  கவிஞர்.வினோ                                         
                                                                                  Poetry Competition

Previous Post Next Post