அருந்தமிழின் அன்னையே - கவிதை போட்டி

கருவாய் உருவான நாள் முதலே காதாரக் கேட்கும் கனிமொழியே ! 

தாய் முகம் கானும் முன்பே தனித்தியங்கும் உன்னை உணர்ந்தேன் ! 

இருஇருபதை தாண்டினாலே தகரம் என‌தள்ளிவிடுகிறார்கள் 

இரண்டாயிரத்தை கடந்தும் தங்கமாகவே ஒளிர்கிறாயே உன்

 இளமையின் ரகசியம் என்னவோ ? என் தாய்மொழி என்று 

உலகத்தார் கூறும் பொழுது மொழிகளின் தாய் என்று நாங்கள் 

கூறுவதில் ஏனோ கொஞ்சம் கர்வம் அதிகம் தான் நவீன உலகில் 

நன்றி பல மறந்து தாயை கைவிட்டு பிறர் கை நாடி நின்று ஒளிவீசும் 

தங்கம் வேண்டாம்,  ஒத்த நிறமுடைய தகரம் போதும் என்று 

எண்ணினாலும் தனக்கு வலித்தால் தாங்கி கொண்டும் தன்

பிள்ளைகளுக்கு வலித்தால் தாங்கி பிடித்தும் தற்பெருமை 

கொள்ளாது தன்னடக்கத்தோடு வளர்கிறாயே ! இத்‌தியாக

உணர்வினாலேயோ நீயும் தாயென போற்றப்பட்டாய் !
 
என்னதான் அயல்வீட்டு மாளிகை வசதியாக இருந்தாலும் 

நம் வீட்டு குடிசையில் உறங்கும் ‌உறக்கம் தான் நிம்மதியை தரும் 

என்பது போல், தன்னை பெருமையாய் காட்டிக்கொள்ள பிற மொழிகள்

உதவினாலும் துக்கத்தில் துயர் துடைக்கவும் துணை நிற்கவும

உன்னை தவிர வேறு யாரால் முடியும் என் செல்ல செந்தமிழே !

 உலக மொழி ஆயிரம் அறிந்தாலும் உள்ள உணர்வு உன்னிடத்தில் அல்லவா

 பிறக்கிறது ! இவ்வுலகில் இறைவன் ஒருவன் உண்டென்றால் அவரிடம் 

மண்டியிட்டு மன்றாடுவது ஒன்றுதான் என் உள்ளம் கவர்ந்த உயிர் தமிழை 

உணர்வுடன் உருகி தாலாட்ட வேண்டும் அருந்தமிழின் அன்னையாக !! 
Previous Post Next Post