மீண்டும் இறக்க எனக்கு விருப்பம் இல்லை - கவிதை போட்டி

 வாசல் வரை வந்தவளே; உள்ளே வர என்ன தயக்கம்...?

 'இறந்த என்னை' பார்க்க- உனக்கு மனம் வர வில்லையா?

 இல்லை... இறந்த பின்னும் 'என்னை' பார்க்க- உனக்கு

 மனம் வர வில்லையா? காரணம் எதுவாக இருந்தாலும் 

 சரி; என் அருகில் வந்து விடாதே. உன் மூச்சு காற்று பட்டால்...

 நான் எழுந்து விடுவான். ஒரு முறை இறந்ததே

 போதும்; மீண்டும் இறக்க எனக்கு விருப்பம் இல்லை...!
Previous Post Next Post