என் அழகை நானே ரசிப்பதையே காதலென்பேன் - கவிதை போட்டி

 எதை காதலென்பேன் ?? தினமும் கற்பனையில்  நான்

 ரசிக்கும் முகம் அறியா ஆணின் மீது நான் கொண்ட 

அன்பையா?? இல்லை காலை கனவில் என் உதட்டில் 

அவன் இதழ் பதிக்கும் அந்த தருணத்தையா?? இல்லை

 மழை சாரல் நேரம்  கற்பனையில்  சாலையில் அவன் 

கரம் பற்றி  நடக்கும் அந்த இன்பத்தையா?? இல்லை 
 
இரவின் கனவில்  அவன் மீது என்  தலை சாய்ந்து

 கதைக்கும்  அந்த நொடியில் வரும்  ஆனந்ததையா???  

இல்லை இல்லை  தினமும் கண்ணாடி முன் நின்று
  
என் அழகை நானே ரசிப்பதையே காதலென்பேன் ♥️
Previous Post Next Post