கண்ணோரம் திரும்பி நீ பார்த்த நொடிகள் கண்டேன்
ஒரு நொடியில் சந்தோஷமே விண்ணோர விழிம்பில்
வந்தாடும் நிலவும் உன் அழகைக் காண திசை மாறுமே
பெண்ணோ அவள் தேவதை உருவாய் வந்தாள் அவள்
என் வீட்டிலே புல்லாங்குழல் பேச்சின் மொழியும் புறம்
பாடிடும் சங்கீதமே தேன் சுமந்த கிண்ணங்கள்
உன் கண்ணம் மேல் கண் வைத்ததே கால் சுவடை
கண்டப்பின் கோலங்களும் கோவித்ததே.....
போகின்ற போக்கிலே புற முதுகை காட்டியே
விரல் கொண்டு வரைய வரம் தந்தாயே....
அழகாய் உன் பின்னிலே அருவி போன்ற கூந்தலில்
மலர் சூட என்னை நீ மயக்கிட்டாயே....
அழகோவிய பெண்ணவளே அலைந்தேன் உன் அழகினிலே
ஆசை அதிகம் என்று தெரிந்திருந்தும் அன்பு வைத்தேன்
உன்மேல் முழுவதுமே பிரம்மணாய் நான் இருந்திருந்தால்
இந்த பூமிக்கு உன்னை அனுப்பிருப்பேனோ படைப்பிலே
சிறந்தவள் என்று உன்னை மணமுடித்திருப்பேனோ...
உந்தன் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லையடி
வார்த்தை இருந்திருந்தால் அது உனக்கு சொந்தமாகுமடி......
Udhaya sena