அவள் - கவிதை போட்டி

 தாய்மை படிக்காத மேதை அவள் கல்வி பயிலாமலே குடும்ப நிர்வாகி அவள்! 

 உளவியல் கற்காமலே  மற்றவரின் மனநிலை அறிந்தவள் அவள்!
 
 இசையும், சுருதியும் பயிலாமலே தாலாட்டு பாடியவள் அவள்!  

அழகுக்கலை பயிலாமலே நம்மை அழகுபடுத்தி பார்த்து அவள்! 

ஆடை வடிவமைப்பு பயிலாமலே நம்மை நளினமாய் நடக்க 

வைத்துக்அழகுபார்த்தவள் அவள்! 

மருத்துவ கல்வி பயிலாமலே நம்மை குணப்படுத்தியவள் அவள்!  

விவசாய கல்வி பயிலாமலே நம்மை வாழ்வை பக்குவப்படுத்தியவள் அவள்! 
Previous Post Next Post