முதல் சந்திப்பு , விழியோர குறும் புன்னகை!
நெடிய பாசம் காலம் நீண்ட உறவு!
விதைக்கப்பட்ட காதல் சற்றே புதைக்கப்பட்ட காமம்!
கரம் தழுவிய நொடிகள் கதைத்து உறங்கிய இரவுகள்!
சிறிய கோபம் அதை மறைக்க பரிசாய் பெற்ற முத்தங்கள்!
பக்குவமான உணர்வு எண்ணிப்பார்க்க இயலா பிரிவுகள்
" சுபம் " என்று விடைபெறா காதலில் இத்துனை இன்ப அத்யாயம்.....