நீ வேண்டும் என் நட்பே - கவிதை போட்டி

 உயிருக்கு உயிர் கொடுத்து... 

என்  உணர்விற்கு வாழ்வளித்து ... 

 என் இம்சைகளுக்கும் இசைந்து.... 

என் கண்ணீருக்கு மருந்தாய் ...
 
என் மகிழ்ச்சிக்கு விருந்தாய்... 

உறவுக்கு மேல் உயிராய் ....

 என் வாழ்க்கைக்கு ஒரு அடித்தளமாய்... 

என் குரல் உயரும் போதெல்லாம் அடிமையாய்... 

என் குரல் விம்மும் போதெல்லாம் தாயாய்....

என் கைபிடித்து ஆறுதலாய்...

 நீ வேண்டும் என் நட்பே... 

பிரிவென்ற சொல் மட்டும் அறியாமல்....!
Previous Post Next Post