மலரே நீ காற்றில் வாசத்தை ஏற்றி அதை வசந்தமாய் மாற்றுகிறாய்,,,,,
சோலையில் வண்ணத்தில் ஊற்றி அதை ஓவியமாய் தீட்டுகிறாய்,,,
பறிக்கவரும் கைகளுக்கும் உன் புன் சிரிப்பை நீட்டுகிறாய்,,,,,,
பறித்த பின்பும் உன் கடமையை ஆற்றுகிறாய்,,,,,,
பைந்தயிர் பூவையரின் குழலின் தோகையாய் பூத்திருப்பாய்,,,,,.
பைந்தமிழ் வீரர்களின் பாதைனில் வாகையாய் வீற்றிருப்பாய்,,,,,
காணாத கடவுளின் சிரிப்பு தனை எங்கள் கண்களுக்கு காட்டும் ,,,,,
அந்தப் பரம்பொருளின்.பாதமதில் காணிக்கை ஆவது ,,,
படைத்தவனுக்கு நீ பகலும் அன்றியோ???